பிரதான செய்திகள்

இரா.சம்பந்தனுக்கு எதிரான விசாரணை

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – பரவிபாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றை அடுத்து, அவர்கள் குறித்த முகாமிற்குள் பிரவேசித்ததாக கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக முகாமின் அதிகாரிகளால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

wpengine

பொலிஸ் திணைக்களத்தின் நோன்பு திறக்கும் நிகழ்வு

wpengine

வவுனியாவில் இரு மாணவர்கள் முதலாமிடம்

wpengine