Breaking
Fri. Nov 22nd, 2024

பண்டாரகம – அட்டுளுகமை பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தேங்காய், பலாக்காய் மற்றும் பாண் ஆகியவற்றை எடுத்துச் சென்று வழங்கியுள்ளார்.


இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு அலோதியாவ பிரதேசத்தில் உள்ள இராணுவ வீதி தடைக்கு அருகில் சென்ற போது, இராணுவத்தினர் அங்கு செல்ல இடமளிக்கவில்லை என தெரியவருகிறது.


இதன் காரணமாக தெவரப்பெரும வீதியில் அமர்ந்து இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


இதன் பின்னர் தெவரப்பெரும, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.


இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்தில் பண்டாரகம பிரதேசசபையின் இரண்டு அதிகாரிகள் அங்கு வந்து அட்டுளுகமை பிரதேசத்தில் இருந்து ஊர்திகளை வரவழைத்து, பாதுகாப்பு பிரிவின் கண்காணிப்புடன் உணவு பொருட்களை ஏற்றிச் செல்ல அனுமதித்துள்ளனர்.


தெவரப்பெரும சுமை ஊர்தியில் ஏறி, அட்டுளுகமையில் இருந்து வந்த சுமை ஊர்திகளில் உணவுப் பொருட்களை ஏற்றியுள்ளார்.


இதன் பின்னர் பிரதேச சபை ஊழியர்களில் உதவியுடன் தனது உடலில் தொற்று நீக்கிகளை தெளிக்க செய்து சுத்தப்படுத்தி கொண்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *