பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த வவுனியா காணி மக்களிடம்

வவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (22) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய காணிவிடுவிப்பிற்கான பத்திரத்தை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கையளித்தார். அதனை ஆளுநர் வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபாவிடம் கையளித்தார்.

இதனடிப்படையில் வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 40.74ஏக்கர் அரச காணிகளும், 13.64ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் விடுவித்த நிலங்களை காணி உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர், வவுனியா அரச அதிபரிடம் தெரிவித்துளள நிலையில் அவை விரைவில் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில் அரச அதிபருடன் வவுனியா பிரதேச செயலர் கா.உதயரசா, செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கே.சிவகரன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

Related posts

காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம்.

wpengine

‘பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்து, மாபியாக்காரர்களுக்கு இலாபமீட்ட வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ள அரசு’

Editor

ஜனாஸா விவகாரத்தில் சலவை செய்யப்படும் சமயோசிதம்!

wpengine