உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இராணுவப் புரட்சி தோல்வி ; 754 பேர் கைது

துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ புரட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டையிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக இராணுவம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்தார் அதிபர் எர்டோகன். நாட்டு மக்கள் நினைத்தால் தான் தன்னையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என்று எர்டோகன் உணர்ந்திருந்தார்.

இதையடுத்து, இராணுவத்திற்கு எதிராக, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என எர்டோகன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதியிற்கு இறங்கி இராணுவத்தினை எதிர்த்து போராட்டியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா குலேனேவும், இராணுவத்தில் உள்ளசிலருமே காரணம் என துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இராணுவ புரட்சி சம்பவத்துடன் தொடர்புடைய 754 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், துருக்கி இராணுவத்தின முதில் நிலை இராணுவ கமாண்டர் ஜெனரல் உமித் டன்டரை புதிய இடைக்கால இராணுவத் தளபதியாக செயல்படுவார் என்று பிரதமர் பினாலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்காரா நகரில் நேற்றிரவு ஏற்பட்ட மோதல்களில் 90 பேர் பலியாகியுள்ளனர்.இதில் உயிரிழந்தவர்களில் 17 பேர் பொலிஸாரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இராணுவ புரட்சியினையடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இஸ்தான்புல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், தொலைக்காட்சி ஔிபரப்புகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

தனியான முஸ்லிம் மரண பரிசோதகர்கள் விவகாரம்; வெடித்தது சர்ச்சை!

Editor

வயலுக்கு சென்ற 7வயது சிறுவன் தீடீர் மரணம் மர்மம் என்ன

wpengine

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

wpengine