பிரதான செய்திகள்

இராஜினாமா செய்யவுள்ள திலங்க சுமதிபால

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவியை ராஜினாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக திலங்க சுமதிபால கூறியதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அதேவேளை பதவி விலகும் கடிதத்தை ஒரு மாதத்திற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் தனது பணிகளை முன்னெடுக்க இடமளிக்க போவதில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்தே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

Related posts

தவிசாளரின் அறிக்கையும் தலைவரின் மௌனமும்

wpengine

யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் !

Maash

இந்தோனேஷியாவில் பூமியதிர்ச்சி!

wpengine