உயர் கல்வி இராஜாங்க அமைச்சு பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
ஏற்கனவே அந்த பதவி விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் அந்த பதவியை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விட்டு பதவியேற்று நடவடிக்கையில் இருந்து வெளியேறியுள்ளார்.
எனினும் தான் இராஜாங்க பதவிகளை இதுவரை ஏற்றதில்லை எனவும் தான் அமைச்சரவை அமைச்சர் பதவிகளை மாத்திரமே ஏற்றிருந்ததாக விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிடடுள்ளார்.
எப்படியிருப்பினும் அவர் அந்த பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதற்காக பொருத்தமான ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சமகால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சில தினங்களுக்கு முன்னர் கண்டியில் வைத்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது