பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சுகளுக்கான இரு புதிய செயலாளர்கள் நியமனம்.

கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக கே.ஜீ.விஜேசிறி அவர்களும் கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.டீ.பாடிகோரால அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து, புதிய செயலாளர்கள் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கே.ஜீ.விஜேசிறி அவர்கள், புத்தளம் மாவட்டச் செயலாளராகச் சேவையாற்றியுள்ளதோடு, எஸ்.டீ.பாடிகோரால அவர்கள், திருகோணமலை மாவட்டச் செயலாளராகச் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
18.02.2022

Related posts

வரி அதிகரிப்பு சிகரட் மற்றும் மதுபானம்

wpengine

கூறி ஏதேனுமொரு வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? மஹிந்த கேள்வி

wpengine

முஸ்லிம்கள் மீதும் பள்ளிகள் மீதும் தாக்குதல் நடாத்துவதை வண்மையாக கண்டிக்கின்றோம்.

wpengine