பிரதான செய்திகள்

இராஜங்க அமைச்சர் சுஜீவயின் பதவியினை பறிக்க உள்ள மைத்திரி

இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சுஜீவ சேனசிங்க கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தி, சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை குறித்து தீர்மானிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுஜீவ சேனசிங்கவின் கருத்து தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்துள்ளனர்.

பிரதமருடன் இது குறித்து பேசியதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மியின் உருவ பொம்பை ஊர்வலம்

wpengine

சிறுவனை கொலை செய்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை – சீனாவில் சம்பவம்!

Editor

பாயீத் விடுதியின் சேவைகளை பாராட்டிய மாவட்ட LIONS CLUBS ஆளுனர்

wpengine