பிரதான செய்திகள்

இரவு நேரத்தில் ஒன்றுகூடிய ராஜபஷ்ச குடும்பம்! பல பிரச்சினை பற்றி மந்திர ஆலோசனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தொடங்கிய விவாதம் நள்ளிரவு வரை நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதிக்கு மேலதிகமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பாகிஸ்தான் உங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்யும் ஜனாதிபதி

wpengine

ஹுனைசின் குற்றச்சாட்டு ஹக்கீமின் வில்பத்து பொடு போக்கை காட்டுகிறது

wpengine

மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய புதிய குழு

wpengine