பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இரண்டு யானைத் தந்தம் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி இருவர் கைது

முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு யானைத் தந்தங்கள் மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டது.

குறித்த யானையினை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் பார்வையிட்டபோது யானை சுட்டுக்கொல்லப்பட்டமையும் அதனுடைய இரண்டு தந்தங்களும் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இராணுவ புலனாய்வு பிரிவினுடைய தகவலுக்கு அமைய முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு யானைத் தந்தம் மற்றும் சடடவிரோத துப்பாக்கி ஒன்றுடனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த பொருட்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்கள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்!

Editor

மோட்டார் சைக்கிள் ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தாய் பலி; தந்தை, இரு பிள்ளைகள் படுகாயம்!

Editor

தேசபந்துவின் ரிட் மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 17 ம் திகதி அறிவிப்பு .

Maash