செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து, 4 பேர் பலி . !

குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோரய பகுதியில் இரண்டு  பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கந்துருவெலவிலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, தோராய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது மதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பலர் குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம் .

Maash

வவுனியாவில் கடையொன்று தீயினால் முற்றாக சேதம்

wpengine

அவசரமாக சிறுநீரகம் தேவை! உடனடியாக தொடர்பு கொள்ளவும்

wpengine