செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் ராகமை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகமை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 738 கிராம் ஹெரோயின், 504 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களும், கார் ஒன்றும் 2 கையடக்கத் தொலைபேசிகளும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ராகமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உபயோகித்த தேங்காய் எண்ணெய்யை மீளநிரப்பி விற்பனை! நிலையம் சுற்றிவளைப்பு.

wpengine

ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள்

wpengine

ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக வழக்கு

wpengine