அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டாவது தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடைந்தது..!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. 

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்த Glovis Century கப்பலில் இருந்து 1,159 கார்கள் இறக்கப்பட்டதோடு, அவற்றில் 669 கார்கள் மீள் ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. 

மீதமுள்ள 490 கார்கள் இலங்கை இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றில் உள்ள 462 கார்களும் BYD வகையான கார்களாகும். 

கொரியக் கொடியுடன் பயணித்த Glovis Century கப்பல், சிங்கப்பூரிலிருந்து இலங்கையை வந்தடைந்த பின்னர் ஓமானில் உள்ள சோஹர் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கியது.

Related posts

கொழும்பு மேயர் தெரிவு பொது நிர்வாக அமைச்சு வழிகாட்டுதல்களுக்கு மாறாக இடம்பெற்றதாள், எதிராக சட்ட நடவடிக்கை!

Maash

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine

கொக்கைன் கொள்முதல், பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கைது..!

Maash