பிரதான செய்திகள்

இரட்டைக்கொலைக்கு ஏறாவூர் பள்ளிவாசல் ஆர்ப்பாட்டம்

ஏறாவூர், சவுக்கடி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு எதிராக ஏறாவூர் பள்ளிவாசல் சம்மேளனம் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

ஜாமியுல் அக்பர் ஜூம் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஒன்றுகூடிய சம்மேளன பிரதிநிதிகளும், பொதுமக்களும் இணைந்து ஏறாவூர் பிரதான வீதிவரைக்கும் பேரணியாக சென்று அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது தாயும், மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் , இரட்டைக் கொலையின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்பிடம் வேண்டுகோள் விடுப்பதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் துண்டுப்பிரசுரம் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தது.

Related posts

அலி சப்ரி,விக்னேஸ்வரன் முன்வரிசை! பலர் விசனம்

wpengine

கழிவுநீரை நன்னீராக மாற்றும் கருவி: இந்தியா மாணவியின் அசத்தல்

wpengine

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் கோட்டாவை நிராகரித்திருந்தார்கள்

wpengine