அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கலுக்கான சொகுசு வாகனங்கள் கொள்வனவுக்காக 117.5 கோடி ரூபாய் குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் அண்மையில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பாக அமைச்சர்களின் பெயர் பட்டியலொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க, புதிய வாகன கொள்வனவை நிராகரித்த பிரதி அமைச்சர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஹர்ஷ டி. சில்வா மற்றும் பாலித தேவரப்பெரும ஆகியோர் தொடர்பிலேயே தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய வாகங்கள் அவசியமா என வினவிய போது உரிய முறையில் பராமரித்து பயன்படுத்தக்கூடியதாக தற்போதுள்ள வாகங்கள் தனக்கு போதுமானது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனக்கு வாகன கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை களிஞர்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் ஹர்ஷ டி. சில்வா தெரிவிக்கும் போது, கடந்த அரசின் போது அமைச்சின் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளர் பயன்படுத்திய வாகனங்களை தன்னிடம் உள்ளதாகவும் வேறு வாகனகள் தேவையில்ல எனவும் தெரிவித்துள்ளார்.