Breaking
Tue. Nov 26th, 2024

முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த எதிர்த்தரப்பினரால் அரசியல் ரீதியான சதி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இஸ்லாமிய சமய தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,

அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்ப நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் பேதங்களை ஏற்படுத்தவதற்கு அரசியல் சதியில் ஈடுபட்டிருப்பதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காகவே 2015 ஜனவரி 08 திகதிய ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களித்ததாகவும், அந்த பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு செயற்படுமாறு தான் அனைத்து முஸ்லிம்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரவி கருணாநாயக்கா,ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *