பிரதான செய்திகள்

இன முறுகளை ஏற்படுத்தும் நோக்குடன் சில குழுக்கள்! பெருநாள் வாழ்த்து செய்தியில் அமீர் அலி

(அனா)

பெருநாள் வாழ்த்து
நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு பெருநாளைக் கொண்டாடும் அனைவரும் பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தவிசாளரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்!

பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாதகாலம் பசித்திருந்து, விழித்திருந்து நட்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம் எவைகளை தவிர்த்துள்ளதோ அவைகளை நமது பழக்க வழக்கத்தில் இருந்து தவிரித்து வாழ்வதற்கு இந்நாளிலிருந்து திடசங்கற்பம் செய்து கொள்ள வேண்டும்.

எமது நாடு பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். ஆதனால் எம் சமூகத்தில் உள்ளவர்களுடனும், பிற சமூகத்தில் உள்ளவர்களுடனும் சகோதர மனப்பான்மையுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நாம் ஒவ்வொருவரும் பழகிக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் இன முறுகல் நிலை ஏற்படக் கூடிய வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றனர். ஆவ்வாறானவர்களின் இனத்தின் மீதான வன்முறைகளில் இருந்து எம்மை பாதுகாக்துக் கொள்வதற்கு நாம் அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் பிராத்தித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தனது பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

மீள்குடியேற்ற செயலணி! பிரதமரினால் நிராகரிக்கபட்ட விக்னேஸ்வரன்.

wpengine

ISIS இயக்கத்தின் கதை முடியப்போகிறது.

wpengine

இஸ்லாமிய புதுவருட வாழ்த்தினை தெரிவித்த ரிசாட் எம்.பி.

Maash