பிரதான செய்திகள்

இன நல்லிணக்க ஆணைக்குழு கோறளைப்பற்று பிரதேச செலகத்தில்

(அனா)

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன்போது 1983 ஜுலை கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வசிக்கும் ஊவா பெருந்தோட்டப் பகுதி மக்கள், கிரான் மற்றும் வாகரை பகுதிகளில் குடியிருப்பு காணிகளை இழந்த முஸ்லிம் மக்கள், சொத்துக்களையும், உயிர்களையும் இழந்த தமிழ் மக்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக செயலணிக் குழுவின் முன் ஆஜராகிய பொதுமக்கள் தமது குறைபாடுகளை வாய்மொழி மூலமும், எழுத்து மூலமும் குறைபாடுகளை வெளியிட்டனர்.

செவ்வாய்கிழமை காலை 9:30 மணி தொடக்கம் மாலை 3:30 மணி வரை வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் 262 முறைப்பாடுகள் வாய் மொழி மூலமும், எழுத்து மூலமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலய செயலணி குழுவின் செயலாளர் க.காண்டீபன் தெரிவித்தார்.

இந்த அமர்வில் மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழந்து வரும் மலையக மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும், நல்லிணக்கப் பொறிமுறையில் தமது எதிர்பார்ப்புக்களையும் மகஜராகக் கையளித்தனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் மலையக தமிழர்களாகிய நாம், ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து சம உரிமையை அனுபவிக்கும் சமூக வாழ விரும்புகின்றோம். நல்லிணக்கத்திற்கான முயற்சிகளின் போது நாம் முகம் கொடுத்து வரும் ஒதுக்குதலை நீக்க ஆவன செய்யும் படி வேண்டுகின்றோம்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவின் பதுளை வீதிக் கிராமங்களில் கூடுதலாக மலையகத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏனைய கிராம மக்களுடன் ஒப்பிடுகையில் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கையின் போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே நல்லிணக்க முயற்சியின் போது எமது சமூகம் சமவுரிமைப் பெற்று சுபீட்சமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் எனக்கோருகின்றோம்.

1958 காலம் முதல் தொடர்ச்சியாக இடம்பெற்ற இனக்கலவரங்களினால் பெரும் இழப்புகளுக்கு முகம் கொடுத்து மலையக மக்கள் இம்மாவட்டதிற்கு இடம்பெயர்ந்து கிராமங்களில் குடியமர்ந்து யுத்த காலத்தில் பாரிய உயிர், உடமையிழப்புகளையும் சந்தித்தனர்.unnamed (1)

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9:30 தொடக்கம் மாலை 4:30 வரை இடம்பெறும்.unnamed (2)

செயலணியின் மூன்றாவது அமர்வு சனிக்கிழமை மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில் காலை 9:30 தொடக்கம் மாலை 4:30 வரையும் இடம்பெறுகின்ற அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 8:30 தொடக்கம் மாலை 4:30 மணிவரை இடம்பெறவுள்ளது. unnamed (3)

Related posts

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாட்டை பற்றி பிழையாக பேசி தெரிகின்றார்கள்

wpengine

குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும்

wpengine

கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை! பீகாரில்

wpengine