பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

Related posts

இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, அன்றுதான் மே 18- சந்திரநேரு சந்திரகாந்தன்.

wpengine

அரசியமைப்பு திருத்தம் ஹக்கீம்,சம்பந்தன் யோசனை

wpengine

துறைமுக நகரத்தை கிராமத்தை நிர்வகிப்பதைப் போன்று நிர்வகிக்க முடியாது-விமல்

wpengine