பிரதான செய்திகள்

இன்றைய தினம் இராஜாங்க,பிரதி அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

புதிய ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் நேற்றையதினம் 18 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.

பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளாத ஏனைய அமைச்சர்களின் பதவி நிலைகளில் மாற்றங்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று முற்பகல் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக அனைத்து அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பதவியை இராஜினாமா செய்த இராஜாங்க அமைச்சர்

wpengine

எரிபொருள் வழங்கல் முறைகேடுகளினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு-ரிஷாட்

wpengine

மன்னார் மட்டத்தில் 1 ஆம் மற்றும் 4 ஆம் இடத்தை பெற்று மடுக்கரை கிராம மாணவிகள்

wpengine