பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகரால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு அமைய விசேட பாராளுமன்ற அமர்வு இன்று 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு அமைய அரசாங்கத்தினால் நிதி செயல்நுணுக்கக் கூற்று ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில் விசேட பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது.
இதற்கு அமைய பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16ற்கு அமைய பிரதமரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் பாராளுமன்றம் ஜூன் 30 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு கூட்டப்படவுள்ளது. இது தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப 4.30 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
ஜூலை மாதம் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்றஅலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2437/04 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டஒழுங்குவிதி குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
ஜூலை 9ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப.10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப. 10.30 மணிமுதல் மு.ப.11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து மு.ப. 11.30 முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி அசேல போயா தினத்தில் பாராளுமன்றம் கூடாது. ஜூலை 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.