Breaking
Sun. Nov 24th, 2024

மாறு வேடம் தரித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இன்று (05) முதல் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பஸ் சாரதிகள் விடும் தவறுகளை குறித்த அதிகாரி விழிப்புடன் கண்கானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விசேடமாக அதிக வேகம், போக்குவரத்தின் போது கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தல் மற்றும் ஏனைய வீதி போக்குவரத்து விதிகளை மீறுகின்றமை உள்ளிட்ட விடயங்களை அந்த அதிகாரி கண்காணிக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அவ்வாறு சாரதி ஒருவர் தவறு இழைப்பானாரால் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 7 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஐவர் மோட்டார் வண்டி செலுத்துனர்கள் என்பதுடன், ஒருவர் பதசாரி எனவும் மற்றையவர் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *