பிரதான செய்திகள்

இன்று மாலை 6மணியில் இருந்து திங்கள் காலை 6மணி வரை ஊடரங்கு சட்டம்

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 04 திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக நாடு முழுவதும் வார இறுதி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆளும் கட்சிக் குழுவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்புக்காக முழு நாட்டிலும் வார இறுதி ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை கருதுகிறது. எனினும், அந்தக் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.   

இந்தநிலையிலேயே சற்றுமுன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Related posts

திரவப்பால் பாவனையை மக்களிடத்தில் ஊக்குவிக்க, பால் உற்பத்தியை மேம்படுத்துவதே எனது நோக்கம்

wpengine

ஜனாதிபதியின் வீடு தீக்கரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஸ்ரீ ரங்காவுக்கு பிணை!

Editor

போருக்குப் பின்பு, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

Maash