பிரதான செய்திகள்

இன்று மன்னாரில் விசாரணை! முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு போதிய தகவல் இல்லை

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மன்னாரில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
குறித்த ஆணைக்குழு கடந்த 25ம், 26ம் திகதிகளில் முல்லைத் தீவு மாவட்ட செயலகத்தில் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னேடுத்தாலும் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு இது தொடர்பில் போதிய தகவல்கள் கொடுக்கபட வில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.399366640Untitled-2

மேலும் தெரிவிக்கையில் யுத்த காலத்தில் எங்கள் பிரதேசத்திலும் அதிகமான முஸ்லிம்கள் காணாமல் போய் உள்ளார்கள் என்றும் தெரிவித்தனர்.

 

Related posts

மதுஷ்வின் இலங்கை மற்றும் துபாயில் 23 வங்கிக் கணக்குகளில் 1000 கோடி

wpengine

முஸ்லிம் மக்களின் உரிமைககளையும் கௌரவத்தையும் பாதுகாகாக்க செயற்பட்டோம்.

wpengine

கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்..!

Maash