பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இன்று மன்னாரில் கூட்டமைப்புடன் ஏமாந்து போன ஹக்கீம் அணியினர்

உள்ளூராட்சி சபைக்கான வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் மன்னாரில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து முதற்கட்ட பேச்சுவார்ததையினை மேற்கொள்ளும் வகையில் மு.காவின் உயர்மட்ட குழுவினர் விசேட உலங்குவானூர்தி மூலம் கொழும்பில் இருந்து மன்னார் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிஸாம் காரியப்பர்,
கூட்டமைப்புடன் முஸ்ஸிம் காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த போதும் அது பயனளிக்கவில்லை, எனினும் கூட்டமைப்புடன் இணைந்து போவோம் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது வேட்பு மனுவை தாக்கல் செய்வது தொடர்பில் தமக்குள் ஏற்பட்டுள்ள முக்கிய பணி காரணமாக இன்று இடம்பெற வேண்டிய பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.

முஸ்ஸிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கும் தயாராகத்தான் இருக்கின்றது என காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

Related posts

மொட்டு கட்சிக்கு முஸ்லிம்கள் இன வேறுபாடின்றி எமது கட்சிக்கு வாக்களிப்பாா்கள்.

wpengine

ஜனாதிபதியின் உத்தியோக வெளிநாட்டு பயணத்தையொட்டி 5 பதில் அமைச்சர்கள் நியமனம்!

Editor

80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன்

wpengine