பிரதான செய்திகள்

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாகைகள், கட் அவுட்கள் உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களையும் அகற்ற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து விளம்பரங்களும் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில், ஒழுக்கமாக செயற்பாடுவார்கள் என நம்புகின்றேன்.

தேர்தல் அலுவலகங்களை நடாத்திச் செல்ல முடியாது, அலுவலகங்கள் இருந்தால் பரவாயில்லை, ஆனால் கட் அவுட், உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.

மாவட்ட ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட அலுவலகங்களை தொடர்ந்து நடத்திச் செல்ல முடியும். ஆனால் அந்த அலுவலகங்கள், வாக்களிப்பு நிலையத்திற்கு 500 மீற்றர் தூரத்திற்குள் அமைந்திருக்கும் பட்சத்தில் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள் நீக்கப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டார்,இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் அமர்வில் வர்த்தக அமைச்சர்கள்

wpengine

சற்றுமுன்பு சுந்தரம் அருமைநாயகத்தையும், ரூபவதி கேதீஸ்வரனையும் தொடர்புகொண்ட மஹிந்த

wpengine

தமக்கு பலரால் அச்சுறுத்தல், பாதுகாப்பு வழங்குங்கள்.!

Maash