பிரதான செய்திகள்

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்; நாட்டின் பல பகுதிகளில் மே தின நிகழ்வுகள்!

சர்வதேச தொழிலாளர் தினமான இன்றாகும் நாட்டின் பல பகுதிகளிலும் மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து பேரணி மற்றும் கூட்டங்களை இன்று ஏற்பாடு செய்துள்ளன.

அந்தவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக்கூட்டத்தை கொழும்பு – கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த மே தினக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டம் கொழும்பு – பீ.ஈ குணசிங்க விளையாட்டு மைதானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், மே தினக்கூட்டம் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேரணி கண்டியிலும் நடைபெறவுள்ளது.

ஜே.வி.பியின் மே தினக் கூட்டத்திற்கான பேரணி பீ.ஆர்.சீ விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி, விஹாரமாதேவி பூங்கா வளாகத்தை சென்றடைந்ததன் பின்னர், அங்கு மே தினக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக்கூட்டம் கண்டி பொது சந்தைக்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக அதன் பிரதி பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் முன்னணியின் பேரணி கண்டியில் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது தொழிற்சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இந்த முறை நடத்தப்படமாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

எனினும், தோட்டவாரியாக மிகவும் எளிமையான முறையில் மே தின நிகழ்வுகளை நடத்துமாறு தோட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தமது மே தினக் கூட்டத்தை பதுளையில் நடத்தவுள்ளதாக, அதன் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோசலிச கட்சியின் மே தினக்கூட்டம் நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த கலையரங்கில் நடைபெறவுள்ளது.

உத்தர லங்கா சபாகயவின் மே தினம் பேரணியும், கூட்டமும் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மே தினக்கூட்டம் நுவரெலியா நகரில் இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் எஸ். சதாசிவம் குறிப்பிட்டார்.

உதிரத்தை வியர்வையாய் சிந்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வன்னி நியூஸ் தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Related posts

தலைமன்னார்,முசலி,மடு போன்ற பிரதேசங்களை சுற்றுலாத்துறை மேம்படுத்த அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

ரணில்,மைத்திரி அரசுக்கு சவால் மஹிந்த

wpengine

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் கைவந்து சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே!

wpengine