பிரதான செய்திகள்

இன்றும் பெற்றோல் வினியோகம் தடை! நாளை இடம்பெறும்

அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை கருத்திற் கொண்டு நேற்று (08) இன்றும் (09) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு LIOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், திருகோணமலையில் உள்ள LIOC முனையம் திறந்திருக்கும் என்றும், அதிலிருந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் மற்றும் அனைத்து தொழிற்துறைகளுக்கும் தடைஇன்றி தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) காலை முதல் மீண்டும் வழமை போல் தொடங்கும் என இலங்கையில் உள்ள LIOC நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

Related posts

பதவியை தட்டில் வைத்து தாரைவார்த்துக் கொடுப்பதற்கு தயார்: பேராளர் மாநாட்டில் ரவூப் ஹக்கீம்

wpengine

யுத்தத்திற்கு பின்னரான பிரச்சினைகளை ஆராயும் காட்சிக் கலையரங்க அமர்வு

wpengine

உங்கள் PURSE ஐ பின்புற பக்கற்றில் வைப்பவரா நீங்கள் ?ஆபத்து (வீடியோ இணைப்பு)

wpengine