தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

இனி பேஸ்புக் வழியாக பணப் பரிமாற்றம் செய்யலாம்: புதிய வசதி விரைவில்

சமூக வலைத்தள ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பேஸ்புக் வலைத்தளம் புதிய வசதி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பேஸ்புக் வலைத்தளம் தனது மெசஞ்சர் ஆப் வழியாக மொபைல் பணப் பரிமாற்ற சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.

பணம் பரிமாற்றம் செய்யப்படும் இரு நபர்களிடமும் டெபிட் கார்டு இருந்தாலே போதுமானது. எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக இந்த சேவையை வழங்குகிறது பேஸ்புக்.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆன்ட்ராய்டு மொபைலில் இந்த வசதியை பயன்படுத்த முதலில் நாம் நமது டெபிட் கார்டு பற்றிய தகவல்களை பேஸ்புக் மெசஞ்சர் ஆப்-பில் சேர்க்க வேண்டும்.

பணத்தை பிறருக்கு அனுப்பவும், பெறவும் ‘பேபால்’ எலக்ட்ரானிக் மணி டிரான்ஸ்பர் வசதியை போன்றே இதிலும் தரப்பட்டுள்ளது. பயனாளர்களின் டெபிட் கார்டு பற்றி விவரங்களை பாதுகாப்பதற்காக ‘பின் பேஸ்டு பாஸ்வேர்டு’ பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவை குறித்து முறைப்பாடு

wpengine

முசலி வட்டார வர்த்தகமானி அறிவித்தல்! முன்னால் பிரதேச செயலாளரின் இனவாதத்தின் உச்சகட்டமே! பிரதேச மக்கள் ஆவேசம்

wpengine

கத்தான்குடி மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்ற வீதியில் ஷிப்லி

wpengine