பிரதான செய்திகள்

இனிப்பு என எண்ணி பூச்சி முட்டையை சாப்பிட்ட சிறுமி

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் இனிப்பு என எண்ணி பூச்சி முட்டையை எடுத்து சாப்பிட்டதால் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னாரைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது பெற்றோருடன் யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து நேற்று மன்னார் நோக்கி செல்ல பேருந்தில் ஏறியுள்ளார். இதன்போது சிறுமியின் பொதியில் இனிப்புக்களுடன் பூச்சி முட்டைகளும் இருந்துள்ளன.

சிறுமி இனிப்பு என எண்ணி பூச்சி முட்டைகளையும் சேர்த்து சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் தமது மகளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார்,கரிசல் மையவாடி! 3 பேருக்கு விளக்கமறியல்

wpengine

ரணில்,சஜித் தலைமையில் இன்று சிறிகொத்தாவில் கூட்டம்.

wpengine

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற போவது யார்? சமூகவலைத்தளம் பொய் சொல்லுகின்றது.

wpengine