பிரதான செய்திகள்

இனவாதம் பேசித்தெரியும் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இனவாத அமைப்பான சிங்கலே என்ற அமைப்பின் உறுப்பினர்கள் இன்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

புதிய சிங்கலே தேசிய இயக்கத்தின் தலைவர் டான் பிரியசாத் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இலங்கை ஒரு பெளத்த நாடு இல்லை என்பதை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் மீண்டும் குறிப்பிட்டிருந்தார்.

முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ்வரன் செயற்படுவதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பர்தாவை கழற்றிவிட்டு பரீட்டை எழுதுங்கள் கம்பளையில்

wpengine

விவசாயிகளின் வறுமை ,கடன் சுமைகளை மீட்க ஒன்றிணைய வேண்டும் -ஜனாதிபதி

wpengine

அப்பாவித் தமிழர்களும் சிறையில் வாடுகின்றார்கள் விடுதலைக்கு நடவடிக்கை எடுங்கள்

wpengine