Breaking
Mon. Nov 25th, 2024
(ஜெமீல் அகமட்)
இன்று நாட்டில் இனவாதம் தலைவிரித்து ஆடுகின்றது அதனால் நாட்டில் பல பாகங்களிலும் அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அதை துணிந்து தட்டிக் கேட்கும் ஒரு அரசியல்வாதியாக அமைச்சர் றிசாட் அவர்கள் மட்டுமே இருக்கின்றார் மற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் அறிக்கை விடுகின்றவர்களாகவே இருக்கின்றனர் என்பது மக்களுக்கு தெரியும் அதனால் மக்கள் இன்று அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியல் கரத்தை பலப்படுத்த முன் வந்து இருப்பது போல் அரசியல்வாதிகளும் முன் வர வேண்டும்.

கடந்த வாரம் இதுவரை நாட்டில் ஏற்பாடாத பிரச்சினை முஸ்லிம்கள்  வாழும் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது இது மிகவும் கவலைக்குரிய விடயம் இன்று மாலை தோப்பூர் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் ஏற்பட்டள்ளது இப்படியான கலவரங்கள் நாட்டில் ஏற்படமாட்டாது என்று ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேற்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேனா அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நம்பியே முஸ்லிம்கள் அதிக வாக்குகளை மைத்திரிபால சிரிசேனா அவர்களுக்கு அளித்து வெற்றி பெற செய்தனர்  ஏனென்றால் நாட்டில் மலர்லது நல்லாச்சி அதனால் இனிமேல் நாட்டில் கலவரம் ஏற்படாது என்ற நம்பிக்கையில் வாக்கு அளித்த மக்களுக்கு இன்று ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும் அதனால் மக்கள் இன்று நல்லாச்சி அரசாங்கம் மீது  சந்தேக கண் கொண்டு பார்க்கின்றனர்.

கடந்த அரசாங்க காலத்தில் சிறு சிறு சம்பவங்கள் ஏற்பட்டது அவைகள் தற்போது நடக்கும் கலவாரம் போல் இல்லை அதனால் மாஹிந்த ராஜபக்ச மீது மக்கள் கொண்டிரருந்த சந்தேக பார்வை இன்று நீங்கி கொண்டு போகின்றது அதனால் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் நிலை வரலாம்.

இந்த நாட்டில் பூரையோடி கிடந்த  யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திர சுவாச காற்றை மக்கள்  சுவாசிக்க செய்த முன்னால் ஜனாதிபதியால் மட்டுமே  தற்போது ஏற்படும் கலவரங்களை நிறுத்த முடியும் என மக்கள் பேசிக் கொள்வதிலும் நியாயம் இருக்கிறது.

நல்லச்சி வந்தால் இனவாதம் பேசி கலவரத்தை உருவாக்கும் ஞானசேரா தேரர்  போன்றவர்களை பிடித்து கூண்டில் போடுவேன் என்று கூறியவர்கள் இன்று ஞானசேரா தேரருக்கு ராஜமரியாதை பாதுகாப்பு கொடுத்து கலவரத்தை ஏற்படுத்மாறு கூறுகின்றனரா ? என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர் இந்த சந்தேகத்தை தீர்க்க நல்லாச்சி அரசாங்கம் இனகலவரத்தை உருவாக்குபவர்களுக்கு தகுதி தரம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது தவறும் பட்சத்தில் நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்படுவதை யாராலும்  தடுக்க முடியாது எனவே முஸ்லிம் மக்கள் இன்றும் கூட நம்பிக்கை  கொண்டு இருக்கும் ஜனாதிபதி அவர்கள் தனது பெயருக்கு கலங்கம் ஏற்படாதவாறு சகல இன மக்களுக்குத்  சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்காக சிறிலங்க சுதந்திர கட்சியின் நல்லாச்சியை உருவாக்கி அதன் பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும் இதை தான் அன்று  தவறு செய்த முஸ்லிம் சமுதாயம் இன்று விரும்புகின்றது.

மஹிந்த ராஜபக்ச அவர்களின் காலத்தில் மக்களை கவர்ந்த சம்பவம் ஒன்றை ஏற்படுத்தி  அதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மிகவும் சூழ்ச்சிகரமாக  அரங்கேற்றிய நாடகம் தான் அலுத்கம கலவரம் என்பது இப்போது மக்கள்  புரிந்து விட்டனர் அதன் சூத்திரதாரியாக  ஞானசேரா  தேரர் செயல்பட்டார் அவருக்கு ஆதரவு வழங்கிவர்கள் யார் என்பது  தெட்ட தெளிவாக மக்கள் புரிந்து விட்டனர் அதனால் ஞானசேரா தேரரை அரசாங்கம் கட்டுபடுத்த தவறினால் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரி அவர்களை மக்கள் தெரிவு செய்வதே சந்தேகமான நிலை வரும் அதனால் சிறுபான்மை இனத்தின் வாக்குகளை பெற முடியாதவர்கள் ஜனாதிபதியாக வர முடியாது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் புரிந்து உள்ள போதும் ஜனாதிபதி இன்னும் புரியாமல் நடக்கின்றாரா? ,அல்லது தனது அரசியல் வாழ்க்கையை முடிக்க பௌத்த மக்களுக்கு ஞானசேரா தேரர் மூலம் உதவி செய்யவுள்ளாரா என்பது புரியாத புதிராகவுள்ளது.

அடுத்து தேர்தல் காலங்களில் இனவாதத்தை மக்களுக்கு ஊட்டி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்கின்றவர்கள் பல மில்லியன் ரூபாய்  பெறுமதிக்கு தனது பதவியை விலை பேசி அரசாங்கத்துக்கு  ஆதரவு வழங்கும் போது அந்த அரசியல் வியாபாரிகளால் மக்களின் பிரச்சினை பற்றி பேச முடியாத நிலை ஏற்படுகிறது அதை பயன்படுத்தி அரசாங்கம் சிறுபான்மை மக்களை அடக்கி சிங்கள  மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள  முயற்சி செய்கின்றதா அல்லது வட கிழக்கை இனைத்து தமிழர்களிடம் அதிகாரம் கொடுக்க இருக்கும் போது அதற்கு விரும்பாத கிழக்கு மக்களுக்கு இப்படி கலவரம் ஏற்படுத்தும் போது அவர்கள் சிங்கள மக்களுடன் வெறுப்பு ஏற்படும் போது தமிழர்களுடன் இனைந்து வாழ விரும்புவார்கள் அதன் மூலம் வட கிழக்கை சுலபமாக இனைத்து கொள்ளலாம் என்ற டயஸ்போராவின் ஆலோசனைக்கு ஏற்ப அரசாங்கம் ஞானசேராவை பயன்படுத்துகின்றதா என்பது தெரியவில்லை.

முஸ்லிம்களை பொறுத்த வரை அவர்கள் தனி நாடோ தனி அலகு எதையும் கேட்கவில்லை சுதந்திரமாக நாட்டில் சகல மக்களுடனும் இனைந்து வாழ வேண்டும் என்பதே முஸ்லிம்களின் ஆசை அதனால்தான் இன்று சகல இன மக்களின் ஆதரவை கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூத்தின் அவர்களுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர் அதனால் அமைச்சர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மக்கள் பொறுமை காத்து வருகின்றனர் அதை அரசாங்கம் பயன்படுத்தி இனக்கலவரத்தை ஏற்படுத்தி நாட்டை சீரழிக்க முயற்சி செய்பவர்களுக்கு எதிராக ஜனாதிபதி  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *