(அஷ்ரப் ஏ சமத்)
கடந்த ஆட்சிக் காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆசீர்வாதத்துடன் இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்களது பள்ளிவாசல், கிருஸ்த்துவ தேவலாயங்கள், ஹிந்துக் கோவில்களை உடைத்து இந்த நாட்டில் ஏனைய இனங்களுக்கிடையில் இனக் குரோதங்களை ஏற்படுத்தினாா்கள். அந்த ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காகவே கடந்த ஜனாதிபதித் தோ்தல் முலம் அந்த அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வந்தீா்கள் என அமைச்சா் சஜத் பிரேமாதாச உரையாற்றினாா்.
ஆனால் எனது தந்தையான காலம் சென்ற ஆர். பிரேமதாசா அவா்கள் இந்த நாட்டில் வாழும் 4 இனங்கள் அவா்களது , மதங்களுக்கிடையே இன நல்லுறவையும் பேணி அந்த மதங்களுக்கு மதிப்பளித்து இனங்கது சகல மதத்திற்கும் அவா்களுக்கு உரிய உரிமைகளை வழங்கி வந்தாா். இந்த நாட்டில் இருந்த விடுதலைப் புலிகளது பிரச்சினைகளுக்கு சாந்தி ,சமாதானம், பேச்சுவாத்தை விட்டுக் கொடுப்பு ஊடாக அமைதியை இந்த நாட்டில் ஏற்படுத்த முனைந்தாா். அவா் அப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பிக்க முன் அவா் அதிா்ஷ்டவசமாக விடுதலைப் புலிகளினால் அநியாமாக கொல்லப்பட்டாா்.
மேற்கண்டவாறு நேற்று (15)ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மைலாம் வெளி பிரதேசத்தில் கமாட்சி கிராமம் என்ற கிரமாத்தினை மக்களிடம் கையளிக்கும் போதே அமைச்சா் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினாா்.
இங்கு 4 ஏக்கா் அரச காணியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 பேர்ச் காணி வழங்கப்பட்டடு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 3 இலட்சம் ருபா கடன் அல் கிம்மா நிறுவனத்தினால் ஒவ்வொரு கிணரும் 50ஆயிரம் ருபா செலவில் நிர்மாணிகக்பட்டு 25 கிணருகளும் நிர்மாணிக்பபட்டடுள்ளன.
இந் நிகழ்வில் பிரதியமைச்சா் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பிணா்கள் அலிசாஹிர் மௌலான, தமிழ்த் தேசிய பராளுமன்ற உறுப்பிணா்கள் சிறி நேசன், யோகேஸ்வரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சரும் கலந்து கொண்டனா்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவா்கள் ஏழை மக்களின் நண்பனாகவே இருந்து மக்களது வாழ்க்கை, அவா்களது அன்றாடப் பிரச்சினைகளில் முக்கியத்துவம் கொடுத்து அதற்காக தன்னையே அர்ப்பிணித்தாா். அவரது மகனான நான் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றியே எனது கடமைகளையும் சேவைகளையும் செய்து வருகின்றேன். எனக்கு இந்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினை தந்த இநத அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆகியோா்களினது நோக்கத்தையும் இலக்கையும் இந்த நாட்டில் உள்ள சகல இன, மத குல பேதமின்றி, இந்த அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச செல்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரநிதிதிகளான அலிசாஹிர் மௌலான, அமீர் அலி, ஹிஸ்புல்லாஹ் தமிழ் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பிணா்கள் மாகாண அமைச்சா்கள் அவா்களது பிரதேச வீடமைப்பு பிரச்சினைகளையும் இணைத்து அவா்களது ஆலோசனைகளுக்கும் கலந்தாலோசித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 10 ஆயிரம் வீடுகளையும் 9 எழுர்சிக் கிரமங்கள் நிர்மாணிப்பதற்கு மாவட்ட முகாமையளருக்கு பணிப்புரை விடுத்துள்ளாதாகவும் அமைச்சா் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றினாா்.
அத்துடன் மட்க்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை நிர்மாணித்த 10 ஆயிரம் வீடுகளையும் மீள நிர்மாணிப்பதற்காக அரசாங்க அதிபா் எனது கவனத்திற்குகொண்டு வந்துள்ளாா் அதனையும் உரிய ஆய்வரிக்கை தனக்கு சமா்ப்பித்து அதனையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சா் கூறினாா். மேலும் 9 கிராமங்களை மீள மட்டக்களப்பு முவின மக்களது தேவைகளை அறிந்து அரச காணிகளை அடையளாம் கண்டு அதனை நிர்மாணிக்ககவும் மாவட்ட முகாமையாளருகு்கு அமைச்சா் சஜித் பணிப்புரை வழங்கினாா்.