பிரதான செய்திகள்

இந்த தேரரை கண்டால் உடன் அறிவிக்கவும்

கல்கிஸ்ஸை பகுதியில் ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக மோசமான முறையில் நடந்துகொண்ட தேரர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபரான அரம்பெபொல ரத்னசார தேரர் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்ததால் உடன் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 071-8591727 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கோ தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் சாணக குணாதிலக என்ற நபரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்திருப்பின் குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ, அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ தகவல் வழங்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள், மருந்துகள் ,அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு இந்தியா கடன்

wpengine

சூத்திரதாரிகளை இனம் கண்டு தண்டனை கொடுக்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine

இடைதங்கள் முகாம்களுக்கு சென்ற அமைச்சர் றிஷாட் (விடியோ)

wpengine