பிரதான செய்திகள்

இந்த ஆண்டிலும் ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்படும்: மஹிந்த தேசப்பிரிய

இந்த ஆண்டிலும் ஏதாவது ஓர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் தேர்தல் ஆணையாளரும் தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய சபையின் உறுப்பினர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இந்த ஆண்லும் தேர்தல் ஒன்றை நடாத்த உத்தேசித்துள்ளோம். இந்த ஆண்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த போதியளவு நிதி வசதி காணப்படுகின்றது.

ஏதாவது ஓர் வகையில் இந்த ஆண்டில் தேர்தலை நடாத்தவே நாம் விரும்புகின்றோம்.

1994ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் ஏதாவது தேர்தல் நடத்தியிருக்கின்றோம். எனவே இந்த ஆண்டில் தேர்தல் நடத்தாவிட்டால் அது ஏதோ ஓர் குறைவாகவே தோன்றும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று மாலை 6மணிக்கு ஊரடங்கு சட்டம்! திங்கள் வரை

wpengine

ரீசார்ஜ் செய்ய வந்த 17 வயது பெண் பலி

wpengine

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு துரித தொலைபேசி இலக்கம்.

Maash