பிரதான செய்திகள்

இந்த அரசாங்கத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடாதது! தமிழ் பேசும் சமூகத்திற்கு சாட்டியடி

கொழும்பில் நேற்று நடைபெற்ற 72வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடாதது குறித்து கவலையடைவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இந்த செயலால் தமது அடையாளங்களை பகிர்ந்து கொள்ள தமிழ் மக்களுக்கு இருந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட இடமளிக்காதன் மூலம் அரசாங்கம் பிரிவினைவாதத்தை வலுப்படுத்தியுள்ளது என்பது எனது கருத்து.

தமிழ் மக்களை இவ்விதமான பிரிக்கும் போது தனியான நாடு, தனியான இனம் என்ற பிரபாகரனின் எண்ணக்கருவை உறுதிப்படுத்துவதாகும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்னும் இரண்டு மாதங்களில் மினி பட்ஜெட் -நிதி அமைச்சர் ரவி

wpengine

நோன்பு பெருநாளை கொண்டாடிய சிறுவன் ஆடிய நடனம் ; இணையத்தில் பிரசித்தி

wpengine

35,000 பட்டதாரிகள் அரச சேவையில், அரசாங்கம் தீர்மானம்.!

Maash