பிரதான செய்திகள்

இந்தேனேசியாவில் இடம் பெற்ற சர்வதேச மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

சர்வதேச ரீதியாக சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் அதைஎவ்வாறு கையாள வேண்டும் என்ற தொனிப்பொருளில் இடம் பெறும் இஸ்லாமிய மாநாடு கடந்த மூன்று நாட்களாக இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் இடம் பெற்றது.

இம்மாநாட்டில் இலங்கை சார்பாக புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் ஹிரா பெளண்டேசன் தலைவருமான ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இறுதி இரண்டு நாட்களாக கலந்துகொண்டார்கள்.

இதில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுகையில்,

சர்வதேச சமூகம் ஒற்றுமைப்பட்டு செயற்படவேண்டும். உலமாக்களும் தலைவர்களும் ஒன்றுபடுகின்ற போதே தங்களது தஃவா பணிகளை சிறப்பாக செய்யமுடியும். முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும், முஸ்லிம்நாடுகளையும் அழித்தொழித்து முஸ்லிம்களுக்கிடையில் பல்வேறு பிளவுகளை ஏற்படுத்துவதினுடாக இஸ்லாத்தினுடைய வளர்ச்சியை தடுப்பதற்கும் முஸ்லிம்களை ஒரு பயங்கிரவாதியாக அடையாளம் காட்டுவதற்கும் இன்று சர்வதேச ரீதியில் முயற்சிகள் இடம்பெறுகிறது இந்த முயற்சிகளை முறியடிப்பதற்காக முழு சர்வதேச முஸ்லிம் நாடுகள் ஒன்றினைய வேண்டும். உலமாக்களும் தாயிகளும் , முஸ்லிம்தலைவர்களும் , கல்விமான்களும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சதிகளை முறியடிக்க முடியும் என பல் வேறு உதாராணங்களுடன் இராஜாங்க அமைச்சர் உரையாற்றினர்.

இந்த மாநாட்டுக்கு விஷேட அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவரகளுக்கு இந்தேனேசியா அரசும் இதனை ஏற்பாடு செய்த அல்மனாரத்துல் இஸ்லாமிய சர்வேதேச அமைப்பும் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.fbe8dc25-e1a8-4932-af73-5ff552716ca9
இம்மாநாட்டில் இறுதி நாள் நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்து கொள்ளுகின்ற இராஜங்க அமைச்சருக்கு விஷேட கெளரமும் அந்தஸ்தும் கிடைத்தது. அத்தோடு கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்களை இராஜாங்க அமைச்சர் வழங்கி வைத்தோடு மக்காவில் உள்ள இமாம்களால் இராஜாங்க அமைச்சருக்கு விஷேட போர்வை போர்த்ப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

Related posts

அரிசி விசாரணை; சில ஊடகங்கள் வேண்டுமென்றே! கட்டுக் கதைகளைத் பரப்பின -அமைச்சர் றிஷாட்

wpengine

அன்வர் பாடசாலை மற்றும் விடுதி வீதிகளுக்கு கள விஜயத்தினை மேற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine

சட்டவிரோத புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் சோதனை – இருவர் கைது!

Editor