இலங்கை முழுவதும் உள்ள புகழ்பெற்ற, வரலாற்று பழமை வாய்ந்த இந்து ஆலயங்கள் சிலவற்றை புனித ஸ்தலங்களாக மாற்றுவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதிஸ்வர ஆலயத்திற்கு நேற்று காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வர பகுதிக்கு சொந்தமான ஆனாலும் இன்னும் வழங்கப்படாத காணிகள் அனைத்தையும் மக்களின் பாவனைக்கும் ஆலய பாவனைக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
அத்துடன் குறித்த அமைச்சரவை பத்திரத்தினை சமர்பிக்கும் போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மக்கள் பிரதி நிதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவின் நிதி உதவியுடன் நடை பெற்று வரும் அபிவிருத்தி மற்றும் கட்டுமான பணிகள் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் தேசிய அரச கரும மொழி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ரவீந்திரன் , இந்து விவகார அமைச்சின் பனிப்பாளர் உமா மகேஸ்வரன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கர் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.