செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இந்திய விமான விபத்தில் பயணிகள், மருத்துவ மாணவர்கள் உட்பட மொத்தம் 246 பலி, ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.

இந்தியாவில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் ஒரேயொரு பயணியைத் தவிர ஏனைய பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான AI171 என்ற ஏர் இந்தியா விமானத்தில் 11 ஏ இருக்கையில் அமர்ந்திருந்த ரமேஸ் விஸ்வகுமார் என்கின்ற பயணியே சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

குறித்த பயணி இங்கிலாந்தில் இருந்து விடுமுறைக்கு அகமதாபாத் வந்து  மீண்டும் திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்திய விமான விபத்தில் பயணிகள், மருத்துவ மாணவர்கள் உட்பட மொத்தம் 246 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரமேஷ் விஸ்வகுமார் எனும் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒரே ஒருவர் மாத்திரமே தக்க தருணத்தில் பாய்ந்து உயிர் தப்பியுள்ளார்.

ஏனைய விமானத்தில் இருந்த 241 பேரும் மருத்துவ மாணவர்கள் 5 பேருமாக மொத்தம் 246 பேர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Related posts

“யாழில் நிகழ்ந்த குற்றம், விசாரிக்கும் அதிகாரம் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இல்லை” 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை.

Maash

கோட்டைக்கல்லாறு மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் புனரமைத்து தருமாறு வேண்டுகோள்.

Maash

காவலில் உயிரிழந்த நிமேஷ் சத்சார என்ற இளைஞனின் விசாரணை மே 16ஆம் திகதி தொடங்க உத்தரவு .

Maash