செய்திகள்பிரதான செய்திகள்

இந்திய படகு மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும் அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் வடமாகாணத்தில் 46,000 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவப் பெண் தலைமைத்துவத்துவ குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்று (09) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடபகுதி மீனவக் குடும்பங்களின்  இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கடற்றொழில் அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தவறினால் வடபகுதி மீனவ மக்கள் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதிப்பார்கள் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

உணவுப்பொருட்களுக்கான வரி குறைக்கப்படவேண்டும். குறிப்பாக அரிசி, சீனி, மா, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படவேண்டும்.

அதேவேளை, எனது மாவட்டத்திலும், வடமாகாணத்திலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சில கருத்துக்களைத் தெரிவிக்கலாமென நினைக்கின்றேன்.

கிளீன் ஸ்ரீலங்கா எனச் சொல்லப்படுகின்ற விடயத்திற்கு மாறாக வடக்கு மாகாணத்திலே சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளின் மோசமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

முன்னைய அரசாங்கங்களின் காலங்களிலும் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்திருந்தன.

இந்நிலையில், தற்போதைய புதிய அரசாங்கத்தின் காலத்திலாவது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் குறைவடையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகளே சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கின்றார்களோ என நாம் எண்ணக்கூடியவாறிருக்கின்றது.

தற்போதைய மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள் இலஞ்சம் பெற்று தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை ஊக்குவிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலை மாறவேண்டும். அதேவேளை முல்லைத்தீவைப் பொறுத்தவரையில் கசிப்பு, கஞ்சா, ஐஸ், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களின் ஊடுவல்கள் அதிகரித்திருக்கின்றன.

அத்தோடு இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு யார் காரணம்.

இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் கரிசனையோடு செயற்படவேண்டும். இல்லாவிட்டால் அரசிற்கு எதிராக மக்கள் இறங்கிப் போராடவேண்டிய சூழல் ஏற்படும் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க இச் சபையிலே இருக்கும்போதே இதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் மேற்கொள்ளும் மாவட்டங்களாக முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் காணப்படுகின்றன.

இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சமாசமும், 34 மீனவ கூட்டுறவுச் சங்கங்களும், 3,847 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 4,642 மீனவர்களும், 215 மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களும், 1,435 பதிவிலுள்ள படகுகளும், 720 பதிவில் இல்லாத படகுகளும் காணப்படுகின்றன.

மன்னார் மாவட்டத்தில் 15000ற்கும் அதிகமான மீனவக்குடும்பங்களும், மொத்தமாக 4,620 படகுகளும், 5000ற்கும் அதிகமான மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களும் காணப்படுகின்றன்றன.

மீனவப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன.

மீனவர்களின் கரவலைப்பாடுகள் இல்லாமல்போகின்றது. அதுமட்டுமல்ல சமூகச்சீர்கேடான விடயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவற்றைக் கண்டுகொள்ளாமல் மக்கள் நலன் சாராத இவ்வாறான திட்டங்கள் எமக்கு அவசியமானதா? என்பது சிந்திக்கவேண்டிய விடயம் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

தலைவர்கள் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.

wpengine

வாட்ஸ் அப் மற்றும் வைபர் உரையாடல்களை ஒட்டுக்கேட்க்கும் அரசாங்கம்

wpengine

பெருமானாரின் முன்மாதிரிகளில் சோதனைகளை எதிர்கொள்வோம்..!

wpengine