பிரதான செய்திகள்

இந்திய துணைத்துாதுவருடன் திருக்கேதீஸ்வர திருத்த வேலைகளை பார்வையீட்ட பா.டெனிஸ்வரன்

இந்திய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்படும் திருக்கீதீஸ்வர திருத்தலத்தை 12-09-2016 திங்கள் காலை மன்னார் மாவட்டத்திற்கு வருகைதந்த இந்திய துணைத்தூதுவர் நடராஜனுடன் இணைந்து விஜயம் மேற்கொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பார்வையிட்டனர்.

அத்தோடு அங்கு இடம்பெறும் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டதோடு, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட  சிற்பங்களையும் அத்தோடு குறித்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் கலைஞர்களையும் சந்தித்து உரையாடியதோடு, திருத்தலத்தின் வேலைகள் எதிர்வரும் ஆண்டு பங்குனி மாதத்துடன் முடித்துக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறதாகவும், ஆனால் தாம் அதற்க்கு முன்னதாகவே குறித்த வேலைகளை நிறைவு செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஒப்பந்தக்காரர் தெரிவித்ததாகவும் அறியமுடிகிறது.14354885_10210351724538610_4081734238421605922_n
அதனைத்தொடர்ந்து வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இந்திய துணைத்தூதுவர் நடராஜனுக்கும் இடையில் ஒரு சில அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அறியமுடிகின்றது.14355087_10210351726978671_3633311197804846422_n

Related posts

கிழக்கு மாகாண ஆளுநரின் கொவிட் விசேட செயலணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு?

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் பங்காளி கட்சியாக இருக்கின்றது.மஸ்தான்

wpengine

ராமநாயக்கவின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட அஜித் மான்னப்பெரும

wpengine