பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இந்தியா தடுப்பூசிகள் நாளை மன்னாருக்கு பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன்

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள், மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம் (29) சுகாதார துறையினருக்கு செலுத்தப்படவுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

‘இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள், மன்னார் மாவட்டத்துக்கும்  வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1,280 கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் முதல் கட்டமாக,  சுகாதார துறையினருக்கு செலுத்தப்படவுள்ளதாகவும் 2 ஆம் கட்டமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

Editor

தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்க்க நேர்முகப் பரீட்சை

wpengine

கல்முனை இரவுடன் சாய்ந்தமருதாக மாற்றம்

wpengine