பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இந்தியா கடற்படையினால் மீட்கப்பட்ட மன்னார் மீனவர்

படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையின் உதவியுடன், இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி மீனவர்கள் இருவரும் மன்னார் – சவுத்பார் பகுதியில் இருந்து தமது டிங்கி படகில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் கரைக்கு திரும்பாததைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கடற்றொழில் திணைக்களத்தினரால் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது.

மீனவர்கள் காணாமற்போனமை குறித்து இந்தியாவிற்கும் அறவிக்கப்பட்டது. இதனையடுத்து, மீனவர்கள் இருவரும் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால், இந்திய கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டதுடன், இன்று காலை மீனவர்கள் இருவரும் டிங்கி படகுடன் இலங்கை கடற்படையினரால் மன்னார் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Related posts

நீருக்குள் வெடித்து விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் குறித்து வெளியான புதிய தகவல்!

Editor

தற்கொலைக்கு புதிய இயந்திரம்! சவப்பெட்டி கூட

wpengine

ரஷ்ய தூதுவர் சுட்டுக்கொலை (விடியோ)

wpengine