உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர்

இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா அல்லது அங்கீகரிக்கப்படுமா அல்லது ஒழுங்குபடுத்தப்படுமா என்ற சந்தேகங்களுக்கு மத்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார்.

இந்தியாவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, புதிய கிரிப்டோ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் இன்று (நவம்பர் 30) கேள்வி நேரத்தின் போது பேசிய நிர்மலா சீதாராமன், “நாங்கள் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டு வருகிறோம். அமைச்சரவை மசோதாவை நிறைவேற்றியதும் அவை அவையில் அறிமுகப்படுத்தப்படும்” என்றார்.

அதுமட்டுமின்றி, NFT-களை (non-fungible token) ஒழுங்குபடுத்துவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் நிதி அமைச்சர் கூறினார். 

மேலும், நாடாளுமன்றத்தின் முந்தைய அமர்வுகளில் தாக்கல் செய்ய முடியாத பழைய மசோதாவை மறுவடிவமைத்து புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக சீதாராமன் கூறினார்.

கிரிப்டோகரன்சிகள் விரும்பத்தகாத செயல்களுக்கு வழிவகுக்கும் அபாயமும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மேலும், Cryptocurrency விளம்பரங்களை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், ரிசர்வ் வங்கி மற்றும் செபி (SEBI) மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவில் Cryptocurrency-ஐ அங்கீகரிப்பதும், தடை செய்வதும் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்நிதியிலும் பாரிய மாற்றம் ஏற்படும். ஏனெனில், இந்தியாவில் உள்ள மக்கள் பல லட்சம் கோடிகளில் இதில் முதலீடு செய்துள்ளனர்.

Related posts

உப்பாற்றுப்பகுதியில் வாழும் மக்களின் மீன்பிடி,விவசாய செய்கை மறுக்கப்படுகின்றது அமைச்சர் றிஷாட்! ஜயவிக்ரம அமைச்சரிடம்

wpengine

முல்லைத்தீவு மாணவி தேசிய மட்டத்தில் முதலாமிடம்

wpengine

இனவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது அமைச்சர் றிஷாட்

wpengine