Breaking
Mon. Nov 25th, 2024

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் திகதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும் தேரோட்டமும் நடந்தது.

இதையொட்டி திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்காக நடன நிகழ்ச்சிகள் மற்றும் ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி கடந்த 8-ம் திகதி காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவி மோகனா தலைமை தாங்கினார்.

துணைத் தலைவி நூரி, செயலாளர் கங்கா, விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் இணை செயலாளர் சுபிக்‌ஷா வரவேற்றார்.

இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 47 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். 3 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் முடிவில் சென்னையை சேர்ந்த ஆன்ட்ரியா ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்டார்.

சேலத்தை சேர்ந்த கவி 2-ம் இடத்தையும், மதுரையை சேர்ந்த வர்னிதா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

இந்த விழாவில், திருநங்கையர்களுக்கு எதிரான அடக்கு முறைகளை கண்டித்து தொடர்ந்து குரல் எழுப்பிவரும் திருநங்கை கிரேஸ் பானுவுக்கு சிறப்பு ​கவுரவப் பட்டமும் அளிக்கப்பட்டது.
201705101701395153_Banu-4._L_styvpf.gif

இந்த அசுர சாதனையை பாராட்டி சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பாக கிரேஸ் பானுவுக்கு “இளம் சாதனை திருநங்கை -2017” என்ற விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள கிரேஸ் பானு தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

இலட்சக்கணக்கான மூத்த திருநங்கைகள் மற்றும் இளைய திருநங்கைகள் முன்னிலையில் எனக்கும் என்னுடைய சமூக செயல்பாடுகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வண்ணம் “இளம் சாதனை திருநங்கை -2017” என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *