பிரதான செய்திகள்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரி பரிசோதனை அறிக்கை இன்று!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி முட்டைகள் இன்று (08) பேக்கரிகளுக்கு வெளியிடப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இன்று முட்டை மாதிரி பரிசோதனை அறிக்கைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது முட்டை தொகுதியாக கடந்த 29ஆம் திகதி ஒரு மில்லியன் முட்டைகள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த அமைச்சர் வஜிர

wpengine

டிசம்பருக்கு முன்னர் தேர்தல் நடைபெறும்! -மஹிந்த ராஜபக்ஷ-

Editor

கூட்டமைப்பு பிரிவினை வாதக்கருத்துக்களை விதைகின்றார்! கட்சிக்கு தடை தேவை

wpengine