பிரதான செய்திகள்

இது வரையில் வாக்களிக்கவில்லை ஆணையாளர்

“தேர்தல் ஆணையாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இது வரையில் வாக்களிக்கவில்லை” என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், நான் விரும்பினால் வாக்களிக்கலாம். எனினும், கட்சி சார்பாக வாக்களித்தேன் என்று நினைப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களை தெளிவூட்டும் நிகழ்வு நேற்று தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய கலந்துகொண்டார்.

இதன்போது மக்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். தேர்தலில் நீங்கள் வாக்களிப்பதில்லையா என இளைஞர் ஒருவர் கேள்வியெழுப்பினார்,
இதற்கு பதிலத்து பேசிய அவர், “யாரும் சிறையில் வைக்கப்பட்டு மரண தண்டணை விதிக்கப்படாவிட்டால், இலஞ்ச ஊழல் செயல்களுக்கு ஆளாகாது விட்டால், யாருடைய பெயரையும் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கமுடியாது.

எனக்கு வாக்கு இருந்தது. ஆனால் நான் தேர்தல் ஆணையாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து வாக்களிக்கவில்லை. அதாவது 2011 ஆம் ஆண்டில் இருந்து வாக்களிக்கவில்லை.

நான் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆனால் கட்சி சார்பாக வாக்களித்தேன் என்று நினைப்பார்கள்.

வாக்களிக்காவிட்டாலும் இவர் தகுதியானவர் இல்லை என்று சொல்வார்கள். இதற்காகத்தான் நான் வாக்களிக்கப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

Related posts

செல்லாக்காசான மைத்திரியின் மே தினப் பூச்சாண்டி

wpengine

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

wpengine

அடக்குமுறையின் முன்னோடியான மஹிந்த இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றார்.

wpengine