பிரதான செய்திகள்

இதுவரை ஐந்து லச்சத்து 37ஆயிரம் ரோஹிங்கியர் வெளியேற்றம்.

வன்செயல் காரணமாக மியன்மாரில் இருந்து பங்களாதேஷ் செல்லும் ரோஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இதுவரை ஐந்து லட்சத்து 37 ஆயிரம் ஏதிலிகள் மியன்மாரை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் 27 ஆயிரத்து 825 குடும்பங்களைச் சேர்ந்த ஏதிலிகள் பங்களாதேஷ் பிரவேசித்திருப்பதாக, பங்களாதேஷ் அரசாங்கம் பதிவு செய்துள்ளது.

புதிதாக சென்றுள்ள ஏதிலிகளுக்கு அடிப்படை வசதிளை செய்து கொடுப்பதற்கு உணவு, மருத்துவ சேவை, மற்றும் தற்காலிக கூடாரங்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ரோஹிங்கிய போராளிக் குழுவினர் காவல்துறை மற்றும் இராணுவ சாவடிகளை தாக்கினர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மியன்மார் இராணுவம் ரோஹிங்கிய முஸ்லீம் மக்களுக்கு எதிராக பாரிய தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த வன்செயல் ஏற்படுவதற்கு ரோஹிங்கிய போராளிகளே காரணம் என மியன்மார் அரசாங்கம் தெரிவித்த போதிலும், இராணுவம் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

”ஒரு பு மீண்டும் மலா்கிறது” நுால் வெளியீட்டு விழா நிகழ்வு

wpengine

மஹிந்தவுக்கு மீண்டும் புலிகள் வர வேண்டும்! அனுர குமார திஸாநாயக்க

wpengine

முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானார்.

wpengine