பிரதான செய்திகள்

இதய அடைப்பை நீக்கும் கீலேசன் தெரபி

நாற்பது வயதைக் கடந்துவிட்டாலோ அல்லது உயர் குருதி அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவில்லை என்றாலோ இதயம் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதய பாதிப்பிற்காக சிகிச்சை எடுக்கும் போது சத்திர சிகிச்சையை தெரிவு செய்வதில்லை. மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினாலும் இதயத்தில் சத்திர சிகிச்சையை மனமுவந்து செய்துக்கொள்வதில்லை. இதனை கருத்தில் கொண்டே மருத்துவ உலகம் இதய பாதிப்பிற்கு தற்போது சத்திர சிகிச்சையில்லாமல் பல புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறர்கள். அதில் ஒன்று தான் கீலேசன் தெரபி.

எம்முடைய உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றுவார்களே அதே போன்றது தான் இந்த கீலேசன் தெரபி என்பது. ஒவ்வொருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில சத்துப் பொருள்களை (அமினோ ஆசிட்ஸ் மற்றும் மல்டி விற்றமின்கள்) ஹைலிக்வீடாக நரம்பு வழியாக செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இரத்த நாளங்களில் தங்கியிருக்கும் உலோக அசுத்தங்கள் வெளியேறிவிடும். அத்துடன் இதய அடைப்பிற்கு காரணமான கால்சியத்தையும் கரைத்து வெளியேற்றிவிடும். இதன் காரணமாக இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீரடைகிறது. இரத்த ஓட்டம் சீரடைந்தால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

டொக்டர் L.சிவபாலன் M.B.B.S., M C C P.,

இதய சிகிச்சை நிபுணர்

Related posts

ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை

wpengine

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

wpengine

சமுதாய நலனுக்காக கட்சிகளும் உலமாக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் -அமைச்சர் றிஷாட்

wpengine