தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

இணைய தளங்களை பதிவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை

சகல இணையத் தளங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில், கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது.

தற்போது செயற்பாட்டில் உள்ள இணையத்தளங்களை கணக்கிடமுடியாதுள்ளதாகவும் நிறுவனங்கள், அமைச்சுக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் என்றடிப்படையில் ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் இருக்கின்றன.

இணையத்தளங்கள் சில, ஊடக சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்திவருவதாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த நிலைமையை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதியப்படாத இணையத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான முறையமையை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் அறியமுடிகிறது.

Related posts

தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வோம்.

wpengine

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்து பார்க்கட்டும்

wpengine

பாராளுமன்றத்தில் 5000 ரூபா பணத்தை சாப்பிட்ட முஷ்ரப் எம்.பி! பணம் மோகம்

wpengine